கோவை இருகூர் மருதாச்சல தெருவை சேர்ந்தவர் சம்பத்குமார்(40). கூலி தொழிலாளி. மது பழக்கம் உடையவர். இவர் நேற்று தனது மனைவி ரத்தின பிரியாவிடம்(33) மது பாட்டில் வாங்க பணம் கேட்டார். அதற்கு அவர் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த சம்பத்குமார் தகாத வார்த்தைகளால் பேசி ரத்தின பிரியாவை அடித்து உதைத்தார். அரிவாளால் தாக்கியதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில், சிங்காநல்லூர் போலீசார் சம்பத்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.