கோவை: மருதமலையில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்!

53பார்த்தது
பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் யோகி பாபு, தனது புதிய படங்களின் கதைக்கோப்புகளை மருதமலை முருகன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக விளங்கும் யோகி பாபு, கோவையில் ஜி. டி. நாயுடு வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாதவன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த யோகி பாபு, நேற்று இரவு மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அர்த்தஜாம பூஜையில் கலந்து கொண்ட அவர், தனது புதிய படங்களின் கதைக்கோப்புகளை கடவுளின் பாதத்தில் வைத்து வணங்கினார். யோகி பாபு கடவுள் பக்தி மிகுந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவைக்கு வரும்போதெல்லாம் மருதமலை முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி