கோவை வடவள்ளி மருதமலை மெயின்ரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார்(43). இவர் நேற்று கோதண்டவர் கோயில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் மது குடிக்க பணம் தருமாறு கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி செந்தில்குமாரிடம் ரூ. 500 ஐ பறித்து சென்றார். இது குறித்து செந்தில்குமார் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் மிரட்டி பணம் பறித்தது வடவள்ளி மருதம் நகரை சேர்ந்த செந்தில் குமார்(44) என்பவரை கைது செய்தனர்.