தங்க நகை கடன் நிறுவனத்தில் 7. 51 லட்சம் மோசடி!

53பார்த்தது
தங்க நகை கடன் நிறுவனத்தில் 7. 51 லட்சம் மோசடி!
கோவை பாலக்காடு ரோடு குனியமுத்தூர் பகுதியில் நியோ ஸ்டார் கோல்டு லோன் என்ற தங்க நகை கடன் வழங்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் அனுஷ் என்பவர் கடந்த 11 மாதங்களாக மேனேஜராக இருந்தார். இவர் வாடிக்கையாளர்கள் அடமானமாக வைத்த192 கிராம தங்க நகைகளை மற்றொரு அடமான கடையில் வைத்து 7 லட்சத்து 51000 ரூபாயை மோசடி செய்து விட்டார். இது குறித்து மேலாளர் வினோத் குமார் கொடுத்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வடக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி