பாராலிம்பிக்: தங்கம் வென்ற இந்திய வீரர்!

52பார்த்தது
பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் தொடரில் இந்திய வீரர்கள் தங்கள் முழு திறனையும் வெளிப்படுத்தி தொடர்ந்து அசத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் நிதேஷ் குமார் பிரிட்டனின் டேனியல் பெத்தேலை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தி உள்ளார். பாரா ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி