ஸ்ரீநாராயணகுரு கல்லூரியில் மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி

57பார்த்தது
கோவை க. க சாவடியில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 2024-25 ஆம் ஆண்டின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் கல்பனா அனைவரையும் வரவேற்றார். கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளருமான அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மாணவர்களிடையே அவர் பேசுகையில், நம்பிக்கை, மரியாதை, புரிதல் மற்றும் கல்வி மூலம் மாணவர்களின் ஆளுமையை வளர்த்துக் கொள்ளுமாறும் வலியுறுத்தி பேசினார். மேலும் கல்வி ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் மாணவர்கள் தங்கள் அணுகுமுறையை பலப்படுத்தி நல்ல நடத்தைகளை வளர்த்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் பொருளாளர் சதீஷ்குமார் மற்றும் நிர்வாக அறங்காவலர் சிவக்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள். ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பங்கஜ் குமார் விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்பித்தார். தொடர்ந்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாணவர் பேரவை உறுப்பினர்களை சிறப்பு விருந்தினர் அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி