வி. எல். பி கலை கல்லூரியில் முதுகலை வகுப்புகளின் துவக்க விழா

62பார்த்தது
வி. எல். பி கலை கல்லூரியில் முதுகலை வகுப்புகளின் துவக்க விழா
கோவைப்புதூர், வி. எல். பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை வகுப்புகளின் துவக்க இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் பி. சதீஷ்குமார் தலைமை ஏற்றார். துணை முதல்வர் டாக்டர் கே. வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார். கிராஸ்கில்ஸ்லேர்னிங் சொல்யூஷன்ஸ், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் முதன்மைப் பயிற்சியாளர், சரவணன் சிறப்பு விருந்தினராகப் பங்கு பெற்றார். அவர் தனது சிறப்புரையில், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் கார்ப்பரேட் உலகின் எதிர்பார்ப்புகள், இடைநிலைக் கல்வியின் தேவை, மனிதனின் நெருக்கடியான நிலைமைகள், பல்வேறு களங்களில் உள்ள வளங்கள், சந்தைப்படுத்துதல், பகுப்பாய்வுப் பகுதிகள் போன்றன குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு எம் பி ஏ துறைத் தலைவர் அர்ச்சனா வரவேற்பு வழங்கினார். நிறைவாக முதுகலை வணிகவியல் துறைத் தலைவர் மெர்லின் உஷா நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி