தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் பயன்பெற 40 வயதிற்கு மேற்பட்ட திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதார் அட்டை, வயதுச் சான்றிதழ், குடும்ப அட்டை போன்றவற்றை வைத்திருக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.