கோவை மாவட்டத்தில் இருகூர், சோமையம்பாளையம், கதிர்நாயக்கன்பாளையம் ஆகிய மூன்று துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இன்று (நவம்பர் 8) பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) அறிவித்துள்ளது.
அதன்படி இருகூர், ஒட்டர்பாளையம், பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), கோல்டு வெங்கிட்டாபுரம், வின்ஸ் (ஒரு பகுதி), ஒண்டிப்புதூர், ராவத்தூர், சிந்தாமணிப்புதூர், சின்னியம்பாளையம் (ஒரு பகுதி), தொட்டிபாளையம் (ஒரு பகுதி) மற்றும் அத்தப்பகவுண்டன்புதூர். சோமையம்பாளையம் துணை மின் நிலையப் பகுதிகளான யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜி.சி.டி. நகர், லுானா நகர்,
கணுவாய், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் பள்ளி ரோடு, சேரன் இண்டஸ்ட்ரியல் பகுதி, கே.என்.ஜி. புதூர், வித்யா காலனி, சாஜ் கார்டன், ஆசிரியர் காலனி, வி.எம்.டி. நகர், நமீதா கார்டன், அப்துல்கலாம் காலனி மற்றும் மேகலாமணி ரோடு. கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலைய பகுதிகளான, கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபுளையம், டீச்சர்ஸ் காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், குமராபுரம், கணேஷ் நகர், ஸ்ரீராம் நகர், பாம்பே நகர், தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும்.