பிஷப் அம்புரோஸ் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம்

71பார்த்தது
கோவை சுங்கம் பைபாஸ் அருகே உள்ள பிஷப் அம்புரோஸ் கல்லூரி 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்பொழுது தரம் உயர்த்தப்பட்டு 2024ம் ஆண்டு முதல் தன்னாட்சிக் கல்லூரிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில், இன்று மாலை பிஷப் அம்புரோஸ் கல்லூரி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கோவை மறை மாவட்ட ஆயரும் கல்லூரியின் தலைவருமான டாக்டர் தாமஸ் அக்குவினாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கல்லூரியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்டேனீஸ் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். கல்லூரியின் செயலர் அருட்தந்தை டாக்டர் ஆர். டி. இ ஜெரோம் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் அ. பீட்டர் ராஜ், பள்ளி முதல்வர் உஷா ராணி, ரோமன் கத்தோலிக்க பள்ளியின் பொறுப்பாளர் ஆரோக்கிய ததேசு மற்றும் கோவை மறை மாவட்ட பொருளாளர் ஆன்டனி செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.  


இவ்விழாவில் ஆர் சி குழு உறுப்பினர்கள், பாதிரியார்கள், கன்னிகஸ்திரிகள், பள்ளி, கல்லூரி துணை முதல்வர், டீன் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி