2. 5 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை

71பார்த்தது
2. 5 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை
பீகாரில் இருந்து குழந்தையை வாங்கி வந்து கோவையில் 2. 5 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகாரில் ஒரு ஏழை தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து உள்ள நிலையில், மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்து உள்ளது. அந்தக் குழந்தையை வளர்க்க முடியாமல் சிரமப்பட்ட அவர்களிடம் 1, 500 ரூபாய் கொடுத்து குழந்தையை தாங்களே வளர்த்துக் கொள்வதாக கூறி எடுத்து வந்துள்ளனர்.
அந்தக் குழந்தையைத் தான் கோவையில் ரூபாய் 2. 5 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து, குழந்தையை வாங்கிய விஜயனும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி