சிங்காநல்லூர் - Singanallur

கோவை: ரூ. 67 லட்சம் மோசடி; ரியல் எஸ்டேட் அதிபர் கைது

கோவை: ரூ. 67 லட்சம் மோசடி; ரியல் எஸ்டேட் அதிபர் கைது

திருப்பூர் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (61). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை டாடாபாத் 8-வது வீதியில் அலுவலகம் நடத்தி வந்தார். இங்கு 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வந்தனர். இவர் குறைந்த விலையில் மாத தவணை முறை திட்டத்தில் வீட்டுமனை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்தார். இதனை நம்பி ஏராளமானோர் வீட்டு மனை வாங்க பணம் செலுத்தினர். ஆனால் பணம் கட்டி முடித்த பின்பும் வீட்டு மனை கிரையம் செய்து தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்நிலையில், செல்வபுரத்தை சேர்ந்த சரவணக்குமார் உள்ளிட்டவர்கள் ரியல் எஸ்டேட் அதிபர் தங்கராஜ் மீது கோவை ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், வீட்டுமனை கொடுப்பதாக மாத தவணை திட்டம் மூலம் தங்கராஜ் (எ) கோகுலம் தங்கராஜ் ரூ. 67 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்ததாக தெரிகிறது. அதன்பேரில், ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் தங்கராஜை கைது செய்தனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా