சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் முகாம்-மாநகராட்சி ஆணையர்

52பார்த்தது
சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் முகாம்-மாநகராட்சி ஆணையர்
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி மூலம் கடன் வழங்கும் முகாம் நடைபெறும் என அறிவித்துள்ளார். முகாம் கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10: 30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். இந்த முகாமில் ஏற்கனவே சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடனுக்கு விண்ணப்பித்து கடன் கிடைக்காத வியாபாரிகள், முதல் மற்றும் இரண்டாம் தவணை கடன் பெற்று முறையாக திரும்ப செலுத்திய வியாபாரிகள், சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவைகளைக் கொண்டு இதில் கலந்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி