பொள்ளாச்சி: திமுக இளைஞரணி சார்பில் இரத்ததான முகாம்

62பார்த்தது
பொள்ளாச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இரத்ததான முகாம் நேற்று (நவம்பர் 23) நடைபெற்றது. இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட அமைப்பாளர் சபரி கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர். இரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக மாநில சட்டத் திருத்தக் குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், பொள்ளாச்சி நகர மன்றத் தலைவர் சியாமளா, திமுக நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் மு. க. முத்து, அமுத பாரதி, கோவை தெற்கு மாவட்டப் பொருளாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி