கோவை: சாலையில் கிடந்த பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த நபர்

68பார்த்தது
கோவை: சாலையில் கிடந்த பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த நபர்
பொள்ளாச்சி, தேவம்பாடி வலசு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (25), இவர் தனியார் நிறுவன ஊழியர். அவர் வழக்கம்போல் தனது பணிக்காக பொள்ளாச்சிக்கு வந்தபோது, ஜமீன் முத்தூர் தனியார் பள்ளி அருகே சாலையில் கேட்பாரற்ற நிலையில் 2.5 லட்சம் ரூபாய் பணம் கிடப்பதைக் கண்டார். 

உடனடியாக அந்தப் பணத்தை எடுத்து, அருகிலுள்ள மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, பணத்தை தவறவிட்டவர் காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர மூர்த்தி என்பதை கண்டறிந்தனர்.

 பின்னர், சந்தோஷ்குமார் முன்னிலையில் உரியவரிடம் பணத்தை நேற்று ஒப்படைத்தனர். சந்தோஷ்குமாருக்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி