கோவை: பிரியாணி கடையில் கையாடல்- கேஷியர் கைது!

68பார்த்தது
கோவை காந்திபுரம் 11வது வீதியில் செயல்பட்டு வரும் பிரபலமான எஸ். எஸ். ஹைதராபாத் பிரியாணி கடையில், கேஷியராக பணியாற்றிய பாபு என்பவர், கடையின் பணத்தை கையாடல் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த ஏழு வருடங்களாக பார்சல் பிரிவு கேஷியராக பணிபுரிந்து வந்த பாபு, கடந்த மார்ச் 7 முதல் 11 வரை கடையின் வரவு செலவு கணக்கில் ரூ. 40, 000 கையாடல் செய்துள்ளார். கடை நிர்வாகம் நடத்திய விசாரணையில், பாபு பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, கடை நிர்வாகம் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து, பாபுவை நேற்று கைது செய்து, அவரிடம் இருந்து ரூ. 40, 000 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி