புனித ரமலான் திருநாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் பள்ளிவாசலில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் கலந்துகொண்டு 50க்கும் மேற்பட்ட ஏழை, எளிய முஸ்லிம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ரமலான் வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்நிகழ்வில், சூலூர் பேரூர் கழக செயலாளர் கௌதமன், பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், துணைத் தலைவர் கணேசு, பொதுக்குழு உறுப்பினர் ரகு துரைராஜ், பேரூர் கழக நிர்வாகிகள் பன்னீர்செல்வம், அ. சு. மணி, கற்பகம், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பசுமை நிழல் விஜயகுமார், மாவட்ட துணை அமைப்பாளர் சாப்ரா, பேரூர் கழக மகளிர் அணி அமைப்பாளர் தங்கமணி, கலங்கல் சிவக்குமார், கண்ணம்பாளையம் பாலு, CTC சந்திரன், மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த நிஜாம், அல்தாப், சூலூர் ஜமாத் தலைவர் கலீல் ரகுமான், மாணவர் அணி மோகன் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குறிப்பாக, ஏழை எளிய மக்களுக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள், ஆடைகள் மற்றும் ரொக்க பணம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.