விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலை கரைப்பு ஊர்வலங்கள் நடைபெற உள்ளது. இவ்விழாவினை பொதுமக்கள் பாதுகாப்புடனும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணமும் கொண்டாடும் வகையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. Dr. K. கார்த்திகேயன், அவர்கள் தலைமையில் நேற்று மாலை மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவை ரோடு அபிராமி தியேட்டரில் துவங்கி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் வழியாக மேட்டுப்பாளையம் காவல் நிலையம் வரை கொடி அணி வகுப்பு நடைபெற்றது. இக்கொடி அணி வகுப்பில் மேட்டுப்பாளையம் துணைக்காவல் கண்காணிப்பாளர், ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள்-4 , காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் என சுமார் 250 போலீசார் கலந்து கொண்டனர். மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு விவரித்து விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு செய்தார்.