சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது. அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், "சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனத்துக்காக வந்த இடத்தில் மரணமடையும் பக்தர்களின் குடும்பத்தினருக்கு இக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் சபரிமலை தேவசம்போர்டில் இருந்து ரூ.5 லட்சம் வரை கிடைக்கும்" என்று அறிவித்துள்ளார்.