திருவாரூர் முத்துப்பேட்டை ஜாம்புவான்னோடை தர்கா கந்தூரி விழாவையொட்டி நவ.13ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முத்துப்பேட்டை ஜாம்புவான்னோடை தர்கா கந்தூரி விழாவையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் நவ.13ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய டிசம்பர் 7 ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் வேலை நாளாக இருக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது