கோவை: மத்திய பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் வாலிபர் கைது

67பார்த்தது
கோவை: மத்திய பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் வாலிபர் கைது
கோவை மத்திய பேருந்து நிலையப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காட்டூர் காவல் நிலையத்திற்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், காட்டூர் காவல் நிலைய போலீசார் உடனடியாக மத்திய பேருந்து நிலையப் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பேருந்து நிலையத்தின் கழிப்பிடப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை போலீசார் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில், அவரிடம் 5. 500 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜமேஷ் (வயது 30) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து கஞ்சாவுடன், ஒரு கைப்பேசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஜமேஷ் மீது வழக்குப்பதிவு செய்த காட்டூர் காவல்துறையினர், அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி