பன்னிமடை: இரவு நேரத்தில் உலா வரும் காட்டு யானை!

50பார்த்தது
கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை கணபதி கார்டன் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி நேற்று வெளியாகியுள்ளது. பதிவான காட்சிகளில், யானைகள் வீட்டில் வளர்க்கப்பட்டிருந்த வாழை மரத்தை பிடுங்கி, தூக்கிக் கொண்டு சிறிது தூரம் சென்று அதை உண்கிறது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் சத்தமின்றி நுழைந்து, வாழை மரத்தை தூக்கிச் செல்லும் காட்டு யானைகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். முன்னதாக, இந்த யானைகள் சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளன. இப்போது குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வாழை மரங்களை பிடுங்கிச் செல்வதால், மக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி