பள்ளிக்கூடம் அருகே சிகரெட் விற்ற வியாபாரி கைது!

79பார்த்தது
பள்ளிக்கூடம் அருகே சிகரெட் விற்ற வியாபாரி கைது!
பள்ளி மற்றும் கல்லூரி அருகே புகைபிடிப்பதற்கும், பீடி-சிகரெட் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி கோவை பெரிய கடை வீதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியின் முன் உள்ள பெட்டிக்கடையில் பீடி சிகரெட் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உக்கடம் சப் இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா நேற்று(செப்.5) அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அந்த கடையில் 10 பாக்கெட் பீடி, 21 பாக்கெட் சிகரெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புகையிலை பொருட்கள் அனைத்தும் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக, பெட்டிக்கடையை நடத்தி வந்த பி. கே செட்டி வீதியைச் சேர்ந்த முகமத் கபீர் (வயது 53) கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி