கோவையில் ஒரு நாள் தர்ணா போராட்டம்

79பார்த்தது
கோவையில் ஒரு நாள் தர்ணா போராட்டம்
கோவை: மத்திய அரசு கடந்த 2022 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும், அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒன்றாக இணைக்க வேண்டும், அனைத்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவினர் நாடு முழுவதும் இன்று ஒரு நாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக கோவையில் நஞ்சப்பா சாலையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மண்டல அலுவலக வளாகத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுத்தக்கட்டமாக வருகின்ற 28 ஆம் தேதி நாடு முழுவதும் 1 மணி நேரம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி