கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் தீர்த்தகிரியின் நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக பணிபுரிந்த ரவிக்குமார் என்பவர், பணியில் செய்த தவறுகளால் சில மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு நிறுத்தப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரவிக்குமார், நேற்று தீர்த்தகிரியின் வீட்டிற்கு குடிபோதையில் வந்து பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து தீர்த்தகிரியின் மனைவி குமாரி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் ரவிக்குமாரை தேடி வருகின்றனர். ரவிக்குமார் வந்து மிரட்டி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.