பிரதமருக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம்

78பார்த்தது
தமிழ் மொழி வளர்ச்சிக்கு 3000 கோடி நிதி ஒதுக்கக் கோரி பிரதமருக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம்

தமிழ் மொழி வளர்ச்சிக்கு 3000 கோடி நிதி ஒதுக்கக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு 3000 கோடி நிதி ஒதுக்கக் வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு 10 ஆயிரம் தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டத்தை மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக இன்று, மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பொதுமக்களுக்கும் பேருந்து பயணிகளுக்கும் இது குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள தபால் நிலையத்திலிருந்து பொதுமக்களிடம் கையெழுத்து பெற்ற 1000 தபால் அட்டைகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி