கோயம்புத்தூர்- தன்பாத் இடையே சிறப்பு ரயில்!

56பார்த்தது
கோயம்புத்தூர்- தன்பாத் இடையே சிறப்பு ரயில்!
வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தன்பாத் - கோயம்புத்தூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
ரயில் எண். 03325 தன்பாத் - கோயம்புத்தூர் வாராந்திர சிறப்பு ரயில் 04. 09. 2024 முதல் 01. 01. 2025 வரை புதன்கிழமைகளில் 10. 10 மணிக்கு தன்பாத்தில் இருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமைகளில் 12. 30 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடையும். ரயில் எண். 03326 கோயம்புத்தூர் - தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் 07. 09. 2024 முதல் 04. 01. 2025 வரை சனிக்கிழமைகளில் மதியம் 12. 55 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் ரயில் திங்கட்கிழமைகளில் தன்பாத்தை 17. 10 மணிக்கு சென்றடையும் என சேலம் கோட்டம் ரயில்வே மேலாளர் மரியா மைக்கேல் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி