கோவை: 92 நாட்களுக்கு ரயில் பெங்களூருவில் நிற்காது

73பார்த்தது
கோவை: 92 நாட்களுக்கு ரயில் பெங்களூருவில் நிற்காது
சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கர்நாடக மாநிலம், பெங்களூரு ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால் சேலம் கோட்டத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் சில ரயில்கள் 92 நாட்களுக்கு பெங்களூரு ரயில் நிலையத்தில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால் மும்பை லோக்மானியா திலக் - கோவை ரயில் (எண்: 11013), கோவை - லோக்மானியா திலக் ரயில் (எண்: 11014), பெங்களூரு - எர்ணாகுளம் ரயில் (எண்: 12677), எர்ணாகுளம் - பெங்களூரு ரயில் (எண்: 12678) ஆகிய ரயில்கள் செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை 92 நாட்களுக்கு பெங்களூரு ரயில் நிலையத்தில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், ரயில்வே துறை பயணிகளுக்கு முன்கூட்டியே இந்த தகவலை தெரிவித்துள்ளது. பயணிகள் தங்கள் பயண திட்டங்களை இதற்கேற்ப மாற்றிக் கொள்ளுமாறு ரயில்வே துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி