உலகளவில் தேவை அதிகரிப்பின் காரணமாக கடந்த 2024-ல் இந்திய காபி ஏற்றுமதி 45 சதவீதம் உயர்ந்து சாதனை படைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 2024-ல் இந்திய காபி ஏற்றுமதி டாலர் மதிப்பு அடிப்படையில் 45 சதவீதம் உயர்ந்து 1,684 டாலராக (சுமார் ரூ. 14 ஆயிரத்து 443 கோடி) இருந்தது. இத்தாலி, ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் காபி வாங்குபவர்களின் தேவை அதிகரித்ததன் மூலம் இது சாத்தியமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.