விஜே சித்ரா கடந்த 2020 டிசம்பர் 9 தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் தற்கொலை வழக்கில் கைதான கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேரை நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 10) விடுவித்தது. தீர்ப்பின் போது ஹேம்நாத்துக்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து விஜே சித்ரா இறப்புக்கு பின்னால் உள்ள மர்மத்திற்கு விடை தெரியாமலேயே போய் விட்டதே என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.