பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட பதிவில், “நீங்கள் ஓர் உண்மையான சாம்பியன் வினேஷ். உங்களின் வலிமை, போராட்டம் மற்றும் இறுதிப் போட்டிக்கான உங்களின் பயணம் இந்திய மகள்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. பதக்கத்தை தவறவிட்டாலும், உங்களின் அபாரமான உறுதியால் அனைவரின் மனதையும் வென்றுள்ளீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.