தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள மமிடாலா கிராமத்தில், நிலத் தகராறு காரணமாக இரண்டு குடும்பத்தினர், ஒருவரை ஒருவர் கண்மூடித்தனமாக கோடரி மற்றும் தடியால் தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில், ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து தகவலறிந்த திப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.