கேரளாவில் பெய்துவரும் கனமழையால், வயநாடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பயங்கர நிலச்சரிவுகள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில், வயநாடு பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு சார்பில் இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுவோர், 1070 என்ற எண்ணில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.