சென்னை உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் புதிய கட்டுப்பாடுகளால் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகன பிக்கப் பாயிண்ட் இடம் மாற்றப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. வருகைப் பகுதியிலிருந்து கார் பார்க்கிங் வரை செல்ல இலவச பேட்டரி கார்கள் இருந்தும் போதுமான கார்கள் இல்லாததால் பயணிகள் பெரும் சிரமடைந்துள்ளனர்.