கிளாம்பக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் ஆய்வு...!

69பார்த்தது
கிளாம்பக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் ஆய்வு...!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக உள்ள மேலும் ஒரு சுவரை அகற்ற அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே ஒரு இடத்தில் மதில் சுவர் அகற்றப்பட்ட நிலையில் மேலும் ஒரு சுவரை அகற்ற அமைச்சர் சேகர்பாபு ஆணையிட்டுள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பேருந்து முனையத்தில் மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகளுக்கு இடைஞ்சலாக உள்ள சுவரை இடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டார். ஏற்கனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாநகரப் பேருந்துகள் இருக்கும் இடத்தில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் இருக்கும் இடத்திற்கு நடுவில் பயணிகளுக்கு தொந்தரவாக இருந்த சுவர் இடிக்கப்பட்டது. இந்த நிலையில், இடையூறாக உள்ள மேலும் ஒரு சுவரை அகற்ற அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூடுதல் பேட்டரி LIVE வாகனங்களை அதிகரிக்க சேகர்பாபு ஆணையிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி