திமுக கூட்டணியின் வெற்றி முடிவு செய்யப்பட்ட ஒன்று என துரை வைகோ தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் நாங்கள் 3 இடங்களை கேட்டுள்ளோம். எங்களின் வேண்டுகோளை ஏற்பார்கள் என்று நம்புகிறோம். பம்பரம் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். இதை கலந்துபேசி முடிவு செய்வோம். திமுகவிடம் தொகுதிகளின் பெயரை குறிப்பிட்டு கேட்கவில்லை, இடங்கள் முடிவான பிறகு அதைப்பற்றி சிந்திப்போம் என்றார்.