சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து

66பார்த்தது
சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் – அகரம்தென் பிரதான சாலையில் ஜெயராஜ் (46), என்பவருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட், 3 அடுக்குமாடி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு, வியாபாரம் முடிந்ததும் சூப்பர் மார்க்கெட்டை மூடிவிட்டு சென்றனர்.

சிறிது நேரத்தில் சூப்பர் மார்க்கெட்டின் 2வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், சேலையூர் போலீசார் மற்றும் தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சேலையூர் போலீசார் மற்றும் தாம்பரம், மேடவாக்கம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் தீ மளமளவென பரவி கட்டிடத்தின் ஒருபகுதி முழுவதுமாக எரிய தொடங்கியது.

அப்போது, அருகிலிருந்த உயர் மின்னழுத்த மின்கம்பியிலும் தீ பரவியதால், பலத்த சத்தத்துடன் தீப்பொறி ஏற்பட்டு, வெடித்து சிதறியது. இதையடுத்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி