சி. பி. ஐ. விசாரணை: தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

58பார்த்தது
குற்றவாளிகளை பாதுகாப்பதற்காகவே சி. பி. ஐ. விசாரணை தேவையில்லை என்கிறார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி. பி. சி. ஐ. டி. விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் மாநில அரசை தாண்டி அவர்கள் எதையும் கண்டு பிடிக்க போவது இல்லை. அதனால் சி. பி. ஐ. விசாரணை வேண்டும் என்பதுதான் எங்களது தீர்க்கமான கோரிக்கை. அதை கவர்னரிடம் நாங்கள் வைத்திருக்கிறோம்.

சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் ஆகியும் துறை அமைச்சரோ, முதல்வரோ இன்னும் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை. திராவிட மாடல் ஆட்சி மக்களை எப்படி மதிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. குற்றவாளிகள் யார் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்களை பாதுகாக்கவே சி. பி. ஐ. விசாரணை தேவையில்லை என்கிறார்கள். மடியில் கனமில்லை என்றால் சி. பி. ஐ. விசாரணைக்கு சம்மதிக்க வேண்டியதுதானே.

குற்றவாளிகளை பாதுகாக்கிறார்கள் என்பதே எங்கள் குற்றச்சாட்டு. இந்த சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று துறை அமைச்சர் ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி