ஆவடியில் ரூ. 1. 5 கோடி நகை, ரூ. 5 லட்சம் கொள்ளை

85பார்த்தது
ஆவடியில் ரூ. 1. 5 கோடி நகை, ரூ. 5 லட்சம் கொள்ளை
ஆவடி அருகே பட்டப்பகலில் நகைக்கடை உரிமையாளரை கட்டிப் போட்டு, துப்பாக்கி முனையில் ரூ. 1. 5 கோடி நகைகள் மற்றும் ரூ. 5 லட்சம் ரொக்கத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து சோதனை சாவடிகளிலும் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, எல்லையம்மன் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (33). இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் கிருஷ்ணா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை மற்றும் அடகுக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நண்பகல் 12 மணியளவில் பிரகாஷ் தனது நகைக்கடையில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அங்கு ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள், வாடிக்கையாளர்கள் போல் அந்த நகைக் கடைக்குள் சென்றுள்ளனர். அங்கு, நகை வாங்குவது போல் நடித்த அவர்கள், திடீரென 2 கை துப்பாக்கிகளை எடுத்தனர். பின்னர் சத்தம் போட்டால் சுட்டு விடுவோம் என பிரகாஷை மிரட்டி, கடையின் ஷட்டரை மூடினர். இதை தொடர்ந்து, சிசிடிவி கேமரா இணைப்பை துண்டித்த அந்த கும்பல், பிரகாஷை சரமாரியாக தாக்கி, அவரது கை, கால்களை கட்டிப் போட்டுள்ளனர். மேலும், அவரது வாயில் துணியை வைத்து அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி