குடும்ப அட்டை வழங்குவதில் தாமதம் இல்லை: அமைச்சர்

62பார்த்தது
குடும்ப அட்டை வழங்குவதில் தாமதம் இல்லை: அமைச்சர்
குடும்ப அட்டைகள் வழங்குவதில் எவ்வித தாமதமும் இல்லை என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கமளித்துள்ளார்.

குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பித்த சுமார் 3 லட்சம் பேருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அவை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கு விளக்கமளித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்பு இதுவரை 15 லட்சத்து 94, 321 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான பயனாளிகள் குடும்ப அட்டையை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுக்கப்பட்டனர். எனவே, குடும்பஅட்டைகளின் எண்ணிக்கைமாறுபடாமல் பராமரிக்கப்பட்டதையொட்டி கடந்த ஆண்டு ஜூலை 6-ம் தேதி முதல் புதிய குடும்ப அட்டைகள் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்கும் பணியும் ஏற்கெனவே நிலுவையில் இருந்த குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி