மகாராஷ்டிரா: லோனாவாலா மாதா தேவி கோயிலில் புத்தாண்டு தினத்தில் வழிபாடு செய்ய வந்த பக்தர்களை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதலுக்கு ஆளான
ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினர். அங்கிருந்த சிலர் பட்டாசுகளை வெடித்ததால் ஏற்பட்ட புகையால், மரக்கிளையில் கட்டியிருந்த தேன் கூட்டில் இருந்து தேனீக்கள் கலைந்தன. காயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.