தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிலையில், அது குறித்து டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிவிக்கையில், திமுக அரசின் வேளாண் பட்ஜெட், விவசாயிகளுக்கு செயற்கை பேரிடர் பரிசாக உள்ளதாக கூறினார். இந்தப் பட்ஜெட் விவசாயிகளுக்கு எந்தவகையிலும் பயனளிக்காது என்றும், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றைக் கூட நிறைவேற்றவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.