குஜராத்: தஜ்புரா பகுதியை சேர்ந்த ராதா (27) கடந்த திங்கள் (டிச. 16) அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்னர் தனது காதலருக்கு 2 வீடியோக்களை அனுப்பியிருக்கிறார். அதில், "வீட்டு சண்டை சச்சரவுகளால் சோர்வடைந்து விட்டேன், உன்னிடம் சொல்லாமல் இந்த தவறான முடிவை எடுத்ததற்கு மன்னித்து விடு. நீ மகிழ்ச்சியாக இருந்தால் என் ஆத்மா சாந்தி அடையும்" என கூறியிருக்கிறார். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.