ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: திருமலைக்கு திடீர் நெஞ்சுவலி

83பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: திருமலைக்கு திடீர் நெஞ்சுவலி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் இருந்த திருமலைக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இந்தக் கொலை வழக்கில் போலீசார் ஒவ்வொரு கட்டமாக அலசி ஆராய்ந்து சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், திருவேங்கடம் என்பவர் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். மேலும் இந்தக் கொலையில் தொடர்புடையவர்களைப் பிடிக்க தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் வழக்கில் கைதாகி பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் இருந்த திருமலைக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட திருமலை, மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் நடமாட்டம் தொடர்பான தகவல்களை கொலை கும்பலுக்கு கொடுத்தவர்தான் ஆட்டோ ஓட்டுநரான திருமலை என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி