சென்னை கிண்டி அருகே உள்ள கத்திப்பாரா பாலத்தில் இருந்து குதித்து 30 வயது இளைஞர் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 50 அடி உயரத்தில் இருந்து குதித்ததாக கூறப்படும் நிலையில் நிகழ்விடத்திலேயே இளைஞர் உயிரிழந்தார். பரபரப்பாக காணப்படும் கத்திப்பாரா மேம்பாலம் அருகே நடந்த உயிரிழப்பால் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இளைஞர் தற்கொலையா? அல்லது வாகனம் மோதி கீழே விழுந்து உயிரிழந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்