சென்னையில் மின் தகன மேடைகளை எல்பிஜியில் இயக்கும் மாநகராட்சி

76பார்த்தது
சென்னையில் மின் தகன மேடைகளை எல்பிஜியில் இயக்கும் மாநகராட்சி
சென்னை மாநகராட்சி சார்பில் சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் எல்பிஜி மூலம் இயங்கும் நவீன தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 192 மயானங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 88 மயானங்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போது இருந்த நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டன. அப்போதைய காலத்தில் இருந்த, மின்சாரத்தால் இயக்கப்படும் தகன மேடைகள், மரக்கட்டைகளை எரிக்கும்போது உருவாகும் எரிவாயுவைக் கொண்டு இயக்கப்படும் தகன மேடைகள் என நவீனமாக உருவாக்கப்பட்டன.

பிற்காலத்தில் இந்ததகன மேடைகளால் அதிக மின்செலவு, துர்நாற்றம்மற்றும் புகை வெளியேறுவதால் ஏற்படும் காற்று மாசு போன்ற பிரச்சினைகள் நிலவி வந்தன. பெரும்பாலான மயானங்கள் கரும்புகை படிந்து, பீதியை ஏற்படுத்தும் தோற்றத்தில் இருந்தன. இந்நிலையில் மேற்கூறிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அனைத்து நவீன மயானங்களையும் எல்பிஜி எரிவாயுவை கொண்டு தகன மேடைகளை இயக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி