வளிமண்டல சுழற்சியின் தாக்கம் காரணமாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், அதிகாலை நேரங்களில் மழை தொடரும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதியில், 3.1 கி. மீ. , மற்றும், 7.6 கி. மீ. , உயரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது.
இதன் தாக்கத்தால், மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து, மேற்குவங்கம் நோக்கி செல்ல வாய்ப்புள்ளது. ஆனால், வங்கக்கடலில் குறிப்பிட்ட பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சமயத்தில் ஏற்படும் மாற்றங்கள், தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு ஓரளவு மழை கொடுக்கும்.
திருவள்ளூர் முதல் புதுச்சேரி வரையிலான பகுதிகளில், வானம் மேகமூட்டமாக காணப்படும். அதிகாலை நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலை செப். , 10 வரை தொடரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும்; இடி, மின்னலுடன் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.