பெரம்பூர் - Perambur

ரயில் நிலையத்தில் திடீர் சோதனையால் பரபரப்பு

ரயில் நிலையத்தில் திடீர் சோதனையால் பரபரப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாருடன் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரும் இணைந்து, இன்று (செப். 16) திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வெளிமாநிலங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக பல்வேறு இடங்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக தமிழக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் ராகவி, ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார், சென்ட்ரல் ரயில்வே போலீஸார், ஆர். பி. எஃப் போலீஸார் ஆகியோர் இணைந்து, போதைப்பொருள் தொடர்பாக திங்கள்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வெளிமாநிலங்களில் இருந்து சென்ட்ரலுக்கு வந்தடைந்த ரயில் மற்றும் ரயில் நிலையத்தின் நடைமேடை, காத்திருபோர் அறையில் அமர்ந்திருந்த பயணிகளின் உடமைகள், பார்சல்கள் ஆகியவற்றை மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் சோதனை செய்தனர். இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் ராகவி கூறுகையில், “வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக ரகசிய தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சோதனை நடைபெற்றது.

வீடியோஸ்


சென்னை
மீண்டும் மஞ்சபை விழிப்புணர்வு
Sep 16, 2024, 14:09 IST/வேளச்சேரி
வேளச்சேரி

மீண்டும் மஞ்சபை விழிப்புணர்வு

Sep 16, 2024, 14:09 IST
மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்; மாநிலம் முழுவதும் 14 வகையான ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் (SUP) உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றைத் தடைசெய்து, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்திய மாநிலங்களில் தமிழ்நாடு அரசும் ஒன்றாகும். தடைக்கு கூடுதலாக, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பிளாஸ்டிக்கிற்கு மாற்றானவற்றை ஊக்குவிப்பதற்கும், “தூக்கி எறியும் பிளாஸ்டிக்கிற்கு எதிரான மக்கள் பிரச்சாரம்” என்ற பெயரில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மீதான தடையை அமல்படுத்துவதுடன் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பிளாஸ்டிக்கிற்கு எதிரான மாற்று பொருட்களை விளம்பரப்படுத்தவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2021 டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ‘மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம், ’ பொது மக்களிடையே விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சுழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்களை ஏற்றுக்கொள்வதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சப்பை பிரச்சாரத்தின் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்துடன், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தி மாநிலம் முழுவதும் 2. 2 லட்சத்திற்கும் அதிகமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.