புளியந்தோப்பு பட்டாளம், டிமல்லஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார், 38. இவர் வீட்டருகே, நகைக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த 24ம் தேதி மாலை 5: 00 மணியளவில், இவரது கடைக்கு வந்த, 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தங்க செயின் வாங்கப் போவதாகக் கூறியுள்ளார்.
புது ரகங்களை பார்த்துக் கொண்டிருந்த அப்பெண், கடையில் இருந்தவர்கள் ஏமாந்த நேரம் பார்த்து, தன்னிடம் இருந்த 4 கிராம் போலி செயினை நகை பெட்டியில் வைத்து விட்டு, 4 கிராம் தங்க செயினை எடுத்துள்ளார்.
பின், தனக்கு எந்த நகையும் பிடிக்கவில்லை எனக்கூறி, திருடிய நகையுடன் மாயமாகியுள்ளார்.
அப்பெண் சென்ற சிறிது நேரத்தில் நகைகளை சோதனை செய்த போது, அதில் ஒன்று போலி என தெரிந்தது. இதுகுறித்து, புளியந்தோப்பு காவல் நிலையத்தில், மனோஜ்குமார் புகார் அளித்துள்ளார்.