ஓட்டுநர் உரிமங்கள் 3. 99 லட்சம் தபால்கள் மூலம் விநியோகம்

73பார்த்தது
ஓட்டுநர் உரிமங்கள் 3. 99 லட்சம் தபால்கள் மூலம் விநியோகம்
ஓட்டுநர் உரிமங்களை விரைவு தபால்கள் மூலம் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்ட ஒரு மாதத்தில் 3. 99 லட்சம் தபால்களை அஞ்சல் துறை விநியோகம் செய்துள்ளது.

ஓட்டுநர் உரிமங்களை விரைவு தபால் மூலம் அனுப்புவதற்காக, தமிழக அரசின் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் அலுவகத்துடன், தமிழ்நாடு அஞ்சல் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதில், இதுவரை 3. 99 லட்சம்தபால்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 99. 27 சதவீதம் தபால்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர்உரிமம் விரைவு தபால்கள் குறித்தபுகார்களுக்கு என்ற www. indiapost. gov. in) இணையதளம் மூலமாகவும், Twitter@indiapostoffice என்ற ட்விட்டர் தளத்திலும், 18002666868 என்ற கட்டணமில்லா உதவி எண் ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி